Monday 9 May 2011

எதிரி (?) இஸ்ரேலுக்கு எரி வாயு (Gas) கத்தார் நாட்டின் கைங்கரியம்!








இஸ்ரேல் கத்தார் உறவு - இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சராக இருந்த ஸிபி லிவினிக்கு கை கொடுக்கும் கத்தார் மன்னர்









இஸ்ரேல் கத்தார் உறவு - இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு கை கொடுக்கும் கத்தார் மன்னரும் அவர் மனைவியும்








இஸ்ரேல் கத்தார் உறவும் - கர்ளாவி கத்தார் உறவும்
இஸ்ரேலோடு நெருக்கமான உறவு வைத்திருக்கும் கத்தார் மன்னனின்
மனைவிக்கு கர்ளாவி கை கொடுக்கிறார்





கிலாபத் சிந்தனையாளர்களின் கனவு இராஜ்யமான கத்தார் நாடு இரத்த வெறி பிடித்த இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற முறையில் எரி வாயு வழங்க முடிவு செய்திருப்பதாக இஸ்ரேலிய இணையதளமான Ynet http://www.ynetnews.com/articles/0,7340,L-4064547,00.html செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் எகிப்தே இஸ்ரேலுக்கான எரிவாயுவை வழங்கி வந்தது. இஸ்ரேல் ஆதரவாளரான முபாரக் அந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர் இஸ்ரேலுக்கான எரிவாயு வழங்கல் தடைப்பட்டிருந்தது.

எனவே இஸ்ரேலுக்கு அடுத்த நேச நாடாக திகழும் கத்தார் நாடு, சந்தை விலையை விட குறைந்த விலையில் இஸ்ரேலுக்கு எரிவாயுவை வழங்க முடிவு செய்திருக்கிறது.

பல வருடங்களாக பலஸ்தீன் காஸா மக்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள இஸ்ரேல், அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைத் தடுத்து வருகிறது. காஸா மக்கள் திறந்த வெளி சிறை ஒன்றில் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு போலியாக உலகிற்கே அறிக்கை விடும் கத்தார் நாட்டின் ஆஸ்தான உலமாக்கள் வழமைபோல மௌனமாக இதற்கு அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அறிய வந்திருக்கிறது.

எது எப்படியிருந்தாலும்

இஸ்ரேலின் நேச நாடான கத்தார், இஸ்ரேலுக்கு உதவி செய்வதைப் போல் இஸ்லாமிய வாதிகளுக்கும் உதவி செய்து வருகிறது.

குறிப்பாக இலங்கையிலிருந்து கத்தார் செல்லும் தாஈகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கிறது.

கத்தார் ஒரு கையினால இஸ்ரேலையும், மறு கையினால் இலங்கையின் இந்த இஸ்லாமிய வாதிகளையும் பற்றியிருக்கிறது.

இஸ்ரேலின் அனுசரணையில் கத்தாரில் ஏற்படப்போகும் இஸ்லாமிய எழுச்சிக்காக தளம் அமைக்கின்ற பணியில் இலங்கையிலிருந்து இஸ்லாமிய வாதிகளும், புகழ்பெற்ற அறிஞர்களும் (?) அடிக்கடி சென்று களம் அமைத்து வருகின்றார்கள்.

1980 களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யாவை விரட்டும் ஜிஹாத் களத்தை சூடேற்ற அடிக்கடி பாகிஸ்தானுக்கு தஃவா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்த தாஈகள், தாலிபான்கள் போன்ற பிற்போக்குவாத சக்திகளை உருவாக்க பின்னணியில் நின்றார்கள்.

இவர்கள் இப்போது இஸ்ரேலுக்குச் சார்பான கத்தாரில் கால் பதிருக்கின்றார்கள். கத்தாரில் கிலாபத்தை உருவாக்க அதனை வழிநடாத்த புதியதொரு ''காலிபான்''களை உருவாக்கவும் இவர்களால் முடியும்.

அமெரிக்காவை ஆதரித்து ஆப்கானில் ஆரம்பமான தாலிபான் அரசு போல இஸ்ரேலை ஆதரித்து கத்தாரில் அமையவிருக்கின்ற ''இஸ்ரேலிய இஸ்லாமிய கிலாபத்" எப்படி அமையுமோ?

பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...