Tuesday 17 May 2011

.ஹமாஸ் - பத்தாஹ் ஒப்பந்தம் மற்றுமொரு காட்டிக்கொடுப்பா?



அல் பதாவினதும் ஹமாஸினதும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி கேள்விப்ட்டதுமே டெல் அவிவ் ஹோட்டலில் இஸ்லாமிக் டீ குடிப்பது போல் ஒரு ஏகாந்த உணர்வு மனதுமுழுதும்.

அட என்ன ஒப்பந்தம் அது என ஆய்வு செய்த போது தான் மீண்டும் இரத்தம் தோய்ந்த இஸ்லாமிய வரலாற்றின் எச்சங்கள் தான் இவர்கள் எனும் உண்மை மீண்டும் மண்டையில் விண் என்று உறைத்தது.

இந்த ஒப்பந்தம் ஒன்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் நடைபெறவில்லை. மாறாக மேற்குலகின் திட்டமிட்ட காய் நகர்த்தலின் விளைவேயது.

புரியவில்லையா?.. ஹாமாஸ். பாலஸ்தீனம் ஈன்றெடுத்த மாபெரும் மக்கள் இயக்கம். இயக்கம் வேறு மக்கள் வேறு எனும் இன்றைய உலகில் மக்கள் அரசியலின் நல்ல முன்னுதாரணம் ஹமாஸ். தியாகி அஹ்மட் யாஸீனின் துல்லியமான திட்டமிடலிலும் தியாகி டாக்டர் ரன்தீஸியின் தரமான வழிகாட்டலிலும் தியாகிகள் அய்யாஸ் முஹியுத்தீன் ஸரீப் போன்றோரது உந்துதலிலும் உருவான போராட்ட இயக்கம்.

காஸாவை கோட்டையாக மாற்றிய இவர்கள் இஸ்ரேலுடன் மோதிய போது தான் அமெரிக்க ஏகாதிபத்திய நாய்களிற்கும் இஸ்ரேலிய மிருகங்களிற்கும் ஒரு உண்மை புரிந்தது.

வெறுமனே இராணுவ அதி நவீன தொழில் நுட்பங்கள் வெறுமனே தாக்கியி்க்கும் அழித்தொழிப்பிற்கு மட்டுமே பயன்படும். நகர்புற சண்டைகளிற்கோ அல்லது கெரில்லா தாக்குதல்களிற்கோ அல்ல என்பது.

ஆம் ஹமாஸுடனான சண்டையின் போ சுமார் 35 இற்கும் மேற்பட்ட அதி நவீன அமெரிக்க தயாரிப்பான டாங்கிகள் தரைமட்டமாக்கப்பட்டது. (இஸ்ரேல் அதை தான் தயாரித்தாக கூறுவது அரபு நாடுகளை அச்சப்பட வைக்க). அப்பாச்சி ரக 3 ஹெலிகப்படர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனால் இவை ஊடகங்களால் அமெரிக்க நலன் கருதி மறைக்கப்பட்டது.
இவ்வளவு திறமைமிக்க இராணுவ அமைப்பைக் தன் வசம் கொண்டுள்ள் ஹமாஸ் மெல்ல மெல்ல ஹிஸ்புல்லாவுடன் இணங்கிப் போவது அமெரிக்காவிற்கு பெரிய இடி. சேய்ஹ் நஸ்ருல்லாவின் காஸா யுத்தத்திற்கு பின்பான பேச்சு எப்போது வெளியானதோ அப்போதே பென்டகன் இது பற்றி கவலைப்பட ஆரம்பித்து விட்டது. ”உங்கள் இரத்தம் எங்கள் இரத்தம். உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம்.பலஸ்தீனர்களிற்காக களமிறங்க ஹிஸ்புல்லாஹ் ஒரு போதும் தயங்காது. இன்சாஅல்லாஹ்”. இதுவே அவர் கும்மில் வைத்து ஆற்றிய உரை.ஹிஸ்புல்லா ஹமாஸை விடவும் தரம் வாய்ந்த போரியல் யுக்திகளையும் நவீன ஆயுதங்களையும் ஈரானிய ஜெனரல்களின் மறைமுக வழி நடத்தல்களையும் கொண்ட அமைப்பு.

இப்போது ஹிஸ்புல்லாவுடனான ஹமாஸின் கூட்டு இஸ்ரேலி்ற்கு மிகப் பாதகமான நிலைமைகளை உருவாக்கும். ஆக ஹமாஸை ஹிஸ்புல்லாவில் இருந்து தனிமைப்படுத்த ஒரே வழி அல்-பதாவுடன் (பீ.எல்.ஓ.) இணைப்பை ஏற்படுத்துவதாகும். இதுவே மேற்குலகின் நிலை.


ஹமாஸிற்கோ ஜீன்த் அல்லாஹ் எனும் ஸலபி கருத்தியல்களை கொண்ட முஸ்லிம் இராணுவ அமைப்பின் காஸா வருகை விரும்பத்தகாத ஒரு விடயம். காஸாவில் தாக்குதல் நடாத்தி அதன் தலைவர்களை கொன்ற போதும் ஜீன்த் அல்லாஹ் மேற்குக்கரையில் தளமெடுத்துள்ளமை ஹமாஸின் எதிர்கால இஸ்லாமிய இருப்பை கேள்விக்குறியாக்க வல்லது. இதனால் மேற்குக்கரையில் ஹமாஸின் மீள் ஸ்தாபிதம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது ஹமாஸிற்கு.



மஹ்மூத் அப்பாஸின் பிரச்சனையோ வேறு. அல்-பதாவின் பலம் வாய்ந்த இராணுவ அணியினர் ஹமாஸ் உடன் உடன்பாட்டு போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என தொடராக வலியுறுத்திய வண்ணம் உள்ளனர். கூடவே மேற்குலகின் திடீர் நெருக்கடி ஹமாஸ் உடன் பேச்சுவார்த்தை செய்யுமாறு.

எகிப்திய அண்மைய இஸ்ரேல் விரோத மனோபாவம் ஹமாஸை பலப்படுத்துவதில் போய் அமைந்துவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் கவலை. அதற்கு ஒரே வழி எத்தன் யஸீர் அரபாத்தின் தோழன் மஹ்மூத் அப்பாஸைக் கொண்டு ஹமாஸை உள்வாங்குவதும் எகிப்துடன் அப்பாஸை முகம் கொடுத்து சமரசம் செய்ய வைப்பதும்.

மொத்தத்தில் மீண்டும் ஸியோனிஸ சதி வலையில் பலஸ்தீன். அழுவதே விதி என்றால் நாமும் சேர்ந்து அழுவோம் பாலஸ்தீன அப்பாவி மக்களிற்காக...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...